சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மனசிலாயோ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அத்துடன் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது வேட்டையன் திரைப்படம். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அந்த டீசரில் ரஜினி மிகவும் மாஸாக இருந்தார். எனவே ரஜினியின் வெறித்தனமான வேட்டையை வேட்டையன் திரைப்படத்தில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது வேட்டையன் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் ரஜினிக்கு, பாடகர் மனோ டப்பிங் கொடுத்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய குரல் ரஜினிக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் டீசரில் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.