spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

-

- Advertisement -

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

தமிழக பா.ஜ.க ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai gun shooting

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் உலாவரும் போலி அறிக்கையில், “தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள் கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாரளமாக வெளியேறிக்கொள்ளுங்கள். ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

we-r-hiring

பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய நிபந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படையில் தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ