spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார் ரேஸிங் டீமை ஆரம்பித்த நடிகர் அஜித்!

கார் ரேஸிங் டீமை ஆரம்பித்த நடிகர் அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் கார் ரேஸுங் டீமை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.கார் ரேஸிங் டீமை ஆரம்பித்த நடிகர் அஜித்!

தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும்
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கார் மற்றும் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பார். இதற்கிடையில் அஜித் 2025 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஜித் தனக்கென தனி அணியை உருவாக்கியுள்ளார். அதன்படி இவர், அஜித் குமார் ரேஸிங் எனும் கார் ரேஸிங் அணியை தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும் இந்த அறிவிப்பை அவர் பெருமையாக வெளியிடுவதாகவும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லஃபேபியன் டப்யூ என்பவர் இந்த அணியின் ஓட்டுனராக கலந்து கொள்வார் என்பதையும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் சுரேஷ் சந்திரா, அஜித்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ