spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு; திமுக அரசுக்குப் பெருமை - அமைச்சர் தங்கம்...

சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு; திமுக அரசுக்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு

-

- Advertisement -

மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,  உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை! என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

MUST READ