spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பருவமழை பெய்து வருகிறது உஷார்;கரூரில் மூடப்படாத கால்வாயில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு;

பருவமழை பெய்து வருகிறது உஷார்;கரூரில் மூடப்படாத கால்வாயில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு;

-

- Advertisement -

கரூர்,பள்ளபட்டியில் கனமழை காரணமாக பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்து சிறுவனின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது.

we-r-hiring

மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு செல்லும் ஏராளமான மாணவ மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் பள்ளப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில்  7-ஆம் வகுப்பு பயின்று வரும் முகமது உஸ்மான் (12 வயது) சிறுவன் மிதிவண்டியில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அரசு மருத்துவமனை அருகே எதிர்பாராத விதமாக சிறுவன் கழிவு நீர் வடிகாலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சிறுவன் முகமது உஸ்மானை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். சிறுவன் கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ