- Advertisement -
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில்கள்
தாம்பரம்- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.20 மணிக்கு புறப்படும் ரெயில்கள் அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.


மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்படும் ரெயில்கள் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு வந்தடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 3ம் தேதி தொடங்கும் இந்த சேவை ஜூன் 26ம் தேதி வரை இயக்கப்படும்


