spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

-

- Advertisement -

தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.

பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. திருவிழாவின் முதல்நாளில் வராகநதி ஆற்றங்கரைக்கு சென்ற மக்கள், அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பகவதி அம்மன் சிலையை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

we-r-hiring

விரதமிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைபாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். அதன் பின்னர் இரவில் நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

MUST READ