spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமழைநீர் அகற்றும் பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழைநீர் அகற்றும் பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

-

- Advertisement -

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பவருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணிர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பேசின் பிரிட்ஜ் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புளியந்தோப்பு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது, தேங்கிநிற்கும் மழைநீரை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் தூய்மைப் பணியாளர்களோடு சேர்நது தேநீர் அருந்தினார்.

 

MUST READ