Homeசெய்திகள்சினிமாஒரு கோடி பார்வைகள் - விடுதலை பாகம் 1 ட்ரெய்லர்

ஒரு கோடி பார்வைகள் – விடுதலை பாகம் 1 ட்ரெய்லர்

-

- Advertisement -
ஒரு கோடி பார்வைகளை கடந்தது விடுதலை பாகம் 1 படத்தின் ட்ரெய்லர்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன், ராஜிவ் மேனன் நடிப்பில் ‘விடுதலை’ 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை படத்தின் 2 பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் 2 பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் யூடியூப்பில் தற்போது 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது. முதல் பாகத்தை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ