spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?....  ஆவேசப்பட்ட விஜய் சேதுபதியின் மகன்.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?….  ஆவேசப்பட்ட விஜய் சேதுபதியின் மகன்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.ஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?....  ஆவேசப்பட்ட விஜய் சேதுபதியின் மகன்.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! அதைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பீனிக்ஸ்- வீழான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த பீனிக்ஸ் திரைப்படத்தை பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நடிகரின் மகன் நடிகராகக் கூடாதா?....  ஆவேசப்பட்ட விஜய் சேதுபதியின் மகன்.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!அதாவது, “டாக்டர் என் மகன் டாக்டராகலையா?, போலீஸ்காரர் மகன் போலீஸ் ஆகலையா?, அப்போ ஏன் ஒரு நடிகரோட மகன் மட்டும் நடிகராக கூடாது? சினிமாவில் ஒரு நடிகரோட மகன் என்றால் வாய்ப்பு மட்டும் தான் கிடைக்கும். வேண்டுமென்றால் ஆனால் அதை தக்க வைக்க திறமை இருந்தால் மட்டும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெட்டிஷன்கள் பலரும் சூர்யாவை விமர்சனம் செய்து வருகின்றனர். டாக்டர் மகன் என்றாலும் நீட் தேர்வு எழுதினால் தான் எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கும் என்றும் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் தேர்வாகினால் மட்டுமே போலீஸ் ஆக முடியும். ஆனால் ஒரு நடிகரின் மகன் நடிகனாக, அறிவு என்பது தேவையில்லை. அது இல்லாமல் தான் நடிகனாகி விடுகிறார்கள் என்ற நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ