spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாங்காங்கில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு!

ஹாங்காங்கில் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!

-

- Advertisement -

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு! விருது நிகழ்ச்சிக்காக ஹாங்காங் செல்கிறது படக்குழு!

ஹாங்காங்கில் நாளை நடைபெறவுள்ள, 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவாக வெளியான பொன்னியின் செல்வன் -பாகம் 1. ஆறு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.

ஹாங்காங்கில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு!

we-r-hiring

சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி, சிறந்த எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சிறந்த ஒளிப்பதிவு ரவி வர்மன், சிறந்த ஆடை வடிவமைப்பு ஏகா லக்கானி ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க்க, லைக்கா நிறுவனம் சார்பாக ஜி.கே.எம்.தமிழ் குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

MUST READ