spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்.... நீங்கள் கொண்டாடுவீர்கள்..... 'கங்குவா' குறித்து சிறுத்தை சிவா!

வித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்…. நீங்கள் கொண்டாடுவீர்கள்….. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!

-

- Advertisement -

கங்குவா படம் குறித்து சிறுத்தை சிவா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. வித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்.... நீங்கள் கொண்டாடுவீர்கள்..... 'கங்குவா' குறித்து சிறுத்தை சிவா!இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். சூர்யா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகி இருக்கும் அடுத்தடுத்த பாடல்களும் படக் குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.வித்தியாசமான சண்டை காட்சிகள் இருக்கும்.... நீங்கள் கொண்டாடுவீர்கள்..... 'கங்குவா' குறித்து சிறுத்தை சிவா!எனவே 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கங்குவா படத்தின் 3D டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, கங்குவா படத்தில் வித்தியாசமான சண்டை காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது தண்ணீருக்கு அடியிலும், காட்டுக்கு நடுவிலும், காற்றுக்கு நடுவிலும் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கங்குவா படத்தை நீங்கள் அனைவரும் கொண்டாடப் போகிறீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

MUST READ