spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலக நாயகன் என்று என்னை அழைக்க வேண்டாம்.... ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

உலக நாயகன் என்று என்னை அழைக்க வேண்டாம்…. ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தனது சிறுவயதிலிருந்தே தனது திரை பயணத்தை தொடங்கி ஏராளமான விருதுகளை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசனை பலரும் உலக நாயகன் என்று கொண்டாடி வருகிறார்கள்.உலக நாயகன் என்று என்னை அழைக்க வேண்டாம்.... ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்! அதாவது சினிமாவை இன்று முதல் இன்று வரை நேசித்து சினிமாவுக்காக தனது கடின உழைப்பை தந்து முழு அர்ப்பணிப்போடு பணியாற்றி வருபவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என எத்தனை விதமான காட்சிகளாக இருந்தாலும் அதில் கச்சிதமாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் ஒவ்வொரு தோற்றங்களில் தோன்றி கலையின் மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்துவார். இந்நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இனி தன்னை உலகநாயகன் போன்ற அடைமொழியால் அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். “என் மீது கொண்ட அன்பால் உலகநாயகன் உள்ளிட்ட பல பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்களால் கொடுக்கப்பட்ட சவக்கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பாராட்டு சொற்பலால் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உங்கள் அன்பினால் நெகிழ்ந்துமிருக்கிறேன். அந்த வகையில் உங்கள் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றி உணர்வு உண்டு. சினிமா கலை எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேன்மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். சினிமா என்பது பிற கலைகளைப் போல அனைவருக்குமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியவர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாக தொடர்ச்சியான முன்ன நகரவில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர் பவனாகவும் இருப்பதை எனக்கு உவப்பானது. எனவே நிறைய யோசனைகளுக்கு பிறகு இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. வேலை குறிப்பிட்ட பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் ஏற்படாத வண்ணம் அவற்றை துறப்பது என்பதே அந்த முடிவு” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

கமல்ஹாசனின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

MUST READ