spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇலங்கையில் கிரிவசிபுர படம் நாளை வெளியீடு

இலங்கையில் கிரிவசிபுர படம் நாளை வெளியீடு

-

- Advertisement -

நான்கு ஆண்டுகள் நீண்ட காத்திருப்பின் பின்னர் இலங்கை முழுவதும் 16 திரையரங்குகளில் 14/03/23 வெளியாகப் போகும் மாபெரும் சரித்திர காவியம்.

ගිරිවැසිපුර / Grivassipura / “கிரிவசிபுர” (மலைவாழ் மக்களின் இராச்சியம்)

we-r-hiring

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 – ஜனவரி 30- 1832) இலங்கையின் கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஆவார். அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது, இவர் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடந்தப்பட்டு வேலூரில் சிறை வைக்கப்பட்டார்.

இவர் தமிழ் நாட்டின் மதுரை நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன், இவரது இயற்பெயர் கண்ணுசாமி. இவரிற்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவார்.

முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டார். இவரைச் சுற்றி நகரும் அரசியல் சூழ்ச்சி, துரோகம் திரைப்படமாக்கப்படுகின்றது.

“#GIRIVASSIPURA”
A Feature Film By Devinda Kongahage

Screening at 16 theatres across the Island on 14 th March Eve.

Film Directors Guild of Sri Lanka – DGSL

Girivassipura Tamil Official Trailer 👇

MUST READ