spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் ராம் சரண் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சிப் பதிவு

-

- Advertisement -

நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சிப் பதிவு

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

அண்மையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில், நடிகர் ராம் சரண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நம் வாழ்விலும் இந்திய சினிமாவிலும் சிறந்த திரைப்படமாக இருக்கும். நான் இப்பொழுதும் கனவில் இருப்பது போல் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், சக நடிகரான ஜுனியர் என்.டி.ஆருக்கும் நன்றி. அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். இனிமையான இணை நடிகராக இருந்ததற்கு நன்றி ஆலியா பட் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ