spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து...

தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு , 39 ரயில்கள் ரத்து -தென் மத்திய ரயில்வே துறை

-

- Advertisement -

தெலங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.
தெலங்கானாவில் தடம் புரண்ட சரக்கு ரயில்: சென்னை வரும் பயணிகள் தவிப்பு - 39 ரயில்கள் ரத்து

தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி – ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்றிரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தரம் புரண்டுள்ளது. வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடு ஒன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதன் காரணமாக  டெல்லி, சென்னைக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

10 க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டன. இரண்டு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்ட பகுதியில் தண்டவாளத்தை சீர் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை சென்ட்ரல் வரும் வடமாநில ரயில்கள்  ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தென் மத்திய ரயில்வே துறை பொது மேலாளர் அருண் குமார் ஜைன் சம்பவ இடத்திலிருந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை. ஆனால் பொருள் சேதம் அதிகமாக உள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழித்தடத்தில் 3 டிராக்குகள் நாசமடைந்தன. கவிழ்ந்த 11 பெட்டிகளை மீட்டெடுத்து, புதிய தண்டவாளங்கள் சம்பவ இடத்தில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அதே போல விழுந்த எலக்ட்ரிக் கம்பிகள் பொருத்தும் பணியும் அதி வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து தொடர்ந்து, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. மேலும் 53 ரயில்களை மாற்று பாதையில் செல்லவும், 7 ரயில்களை நேரம் மாற்றி அனுப்பவும் தென் மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தினால், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

நர்சாபூர் – செகந்திராபாத், ஹைதராபாத் – சிர்பூர் காகஜ்நகர், செகந்திராபாத் -காகஜ்நகர் காஜிபேட்டா – சிர்ப்பூர் டவுன், சிர்ப்பூர் டவுன் – கரீம் நகர், கரீம்நகர் – போதன், பத்ராசலம் ரோட் – பலார்ஷா, யஷ்வந்த்பூர் – யூசஃப்பூர், காச்சிகூடா – கரீம் நகர், செகந்திராபாத் – ராமேஸ்வரம், செகந்திராபாத் – திருப்பதி, ஆதிலாபாத் -நாந்தேட், நிஜாமாபாத் – காச்சிகூடா, குந்தக்கல்லு – போதன் ஆகிய 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை 

MUST READ