spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி - நிறுவனம் மீது...

பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி – நிறுவனம் மீது போலீசில் புகார்

-

- Advertisement -

தென் மாநிலத்தில் சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி செய்த திருநெல்வேலியை மையமாக கொண்ட நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்.

பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி - நிறுவனம் மீது போலீசில் புகார்

we-r-hiring

திருநெல்வேலி மாவட்டம் நூக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் டாங்கி பேலஸ் என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத் தொடங்கி உள்ளார். இதில் கூட்டாளிகளாக கிரி சுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்து கொண்டு ஒரு லிட்டர் கழுதைப்பால் ₹ 1600 முதல் ₹ 1800 வரை வாங்குவதாக விளம்பரம் செய்தார். மேலும் யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக அளவில் கழுதை பால் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன. ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று மக்களை நம்ப வைத்தார்.
மேலும் சந்தையில் கழுதைப் பாலுக்கு அதிக தேவை உள்ளது. கழுதை பால் வியாபாரம் செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று யூடியூப் வீடியோ மூலம் மக்களை நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதை பால் வியாபாரம் உண்மை என நம்பிய மக்கள் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.

மேலும் கழுதை பால் விற்பனை லாபம் பெறுவது தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கருத்தரங்கு நடத்தி உள்ளனர். இவர்கள் பேச்சில் கவர்ந்த பலரும் இதில் இணைந்தனர். இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ஐந்து லட்சம், கால்நடை மருத்துவர் என்று காண்பித்து கழுதைகளுக்கு சிகிச்சை அளித்தது ₹ 50,000 என வசூல் செய்தனர். மேலும் கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிலுவை வைத்தால் அந்த பால் கெட்டுவிடும் என்பதால் நிலுவை வைக்க அதிக திறன் கொண்ட ரெஃப்ரிஜிரேட்டர் தேவை என 75000 முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் வசூல் செய்தனர்.

விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

என பல்வேறு காரணங்கள் கூறி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ₹ 25 லட்சத்தில் இருந்து ₹ 1.5 கோடி வரை வசூல் செய்தனர். அவ்வாறு சுமார் ₹100 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஐதராபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் உலகநாதன் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். மோசடி செய்தவர்களை கைது செய்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

MUST READ