Homeசெய்திகள்சினிமாநடிகர் விக்ரமின் லைன் அப்பில் இணைந்த அஜித் பட இயக்குனர்.... யார் தெரியுமா?

நடிகர் விக்ரமின் லைன் அப்பில் இணைந்த அஜித் பட இயக்குனர்…. யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.நடிகர் விக்ரமின் லைன் அப்பில் இணைந்த அஜித் பட இயக்குனர்.... யார் தெரியுமா? அதேசமயம் விக்ரம், சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம் விக்ரம். நடிகர் விக்ரமின் லைன் அப்பில் இணைந்த அஜித் பட இயக்குனர்.... யார் தெரியுமா?இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வரும் நிலையில் தற்போது விக்ரமின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம், அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஒரு வரி கதையை கேட்டிருப்பதாகவும் விரைவில் இவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

MUST READ