கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா மிக நீளமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அதாவது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் காதல் வாழ்க்கை தொடங்கியதற்கு காரணமாக அமைந்த நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகளை தங்களின் ஆவணப்படத்தில் பயன்படுத்த நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டதாகவும் அவர் தனிப்பட்ட காரணத்திற்காக தன்னை பழிவாங்கும் நடவடிக்கையினால் இரண்டு வருடங்களாக காத்திருந்தும் அனுமதி அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் நயன்தாரா. இந்த தகவல் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷ், நேற்று வரை
தனது தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. அதேசமயம் நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் தன்னிடம் முறையான அங்கீகாரம் பெறாமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் ,நடிகை நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே உயர் நீதிமன்றம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட காட்சிகள்….. நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த தனுஷ்!
-