Homeசெய்திகள்சினிமாதனது திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கீர்த்தி சுரேஷ்!

தனது திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கீர்த்தி சுரேஷ்!

-

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனது திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கீர்த்தி சுரேஷ்!கடைசியாக இவரது நடிப்பில் ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள பேபி ஜான் எனும் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதாவது தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களின் திருமணம் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் வைத்து நடைபெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும் பலமுறை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அதனை கீர்த்தி சுரேஷ் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தகவலும் வதந்தியாக இருக்குமோ என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது தனது திருமணமும் குறித்த செய்தியை நடிகை கீர்த்தி சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ஆண்டனி கீர்த்தி என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ