
பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பர்பிள், கிரீன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அடுத்து ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையிலான எல்லோ லைன், நாகவரா – கலெனா அக்ரஹாரா இடையிலான பிங்க் லைன், கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் – சென்ட்ரல் சில்க் போர்டு இடையிலான ப்ளூ லைன் என மூன்று வழித்தடங்களில் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் எல்லோ லைன் வழித்தடப் பணிகள் அடுத்த சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில் வரும் ஜனவரி 2025ல் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லோ லைன் வழித்தடம் முழுமையாக தயாராகி விட்டது. மொத்தம் 16 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது.
அந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதற்கு போதிய ரயில் பெட்டிகள் இன்னும் வந்து சேரவில்லை. டிடாகர் வேகான்ஸ் என்ற நிறுவனம் தான் ரயில் பெட்டிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு விநியோகம் செய்கிறது.
காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் எல்லோ லைனை முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை என தெரியவருகிறது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


