spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘இலை’யையும் ‘மலை’யையும் கடந்து விஜயின் வியூகம்... மருது அழகுராஜ் கணிப்பு

‘இலை’யையும் ‘மலை’யையும் கடந்து விஜயின் வியூகம்… மருது அழகுராஜ் கணிப்பு

-

- Advertisement -

‘‘திமுக- அதிமுக எனும் நெடுங்கால இருதுருவ அரசியலுக்கு பெரும் சவால் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது’’ என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் பிரமுகருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்தினால் கூட்டணிக்குள் மோதல் வரும் என திமுக அஞ்சுகிறது. எடப்பாடி திமுகவோ பத்துத் தோல்வி பதினொன்றாகி விடுமே என பயப்படுகிறது. ஆனால் பிறந்து இரண்டு மாதமே ஆன விஜய்யின் வெற்றிக் கழகமும் பாஜக தலைமையிலான NDA-யும் இழப்பதற்கு ஏதுமில்லை என்னும் துணிச்சலோடு உள்ளாட்சித் தேர்தலிலேயே ஒரு வெள்ளோட்டம் பார்த்துவிட துடிக்கின்றன.

we-r-hiring

ஆக திமுக அதிமுக எனும் நெடுங்கால இருதுருவ அரசியலுக்கு பெரும் சவால் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. விரைந்து உறுப்பினர்களை கோர்த்து அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்தின் கரங்களில் சேர்த்து முன் கூட்டியே தனக்கான பொதுச் சின்னத்தை பெற்றிட முயற்சிக்க கூடும். அதற்கு இடையில் வரும் தேர்தல்களை “விடை”களாக்க தவெக களம் காணக்கூடும்..marudhu alaguraj

காலத்தே களத்தில் இறங்கி மக்களை சந்தித்து 77-ன் நாயகனாகிட 69-ன் நாயகன் போராடுவதோடு “இலை”யையும் NDA – “மலை”யையும் கடந்து உதயநிதிக்கு தான் தான் நேரடி போட்டி என்கிற அரசியல் சூழலை உருவாக்குவதே விஜய்யின்வியூகம் என்றால் எதிர்வரும் T26 இதுவரை தமிழகம் காணாத T20 தான் போ’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

MUST READ