Homeசெய்திகள்க்ரைம்பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்

-

- Advertisement -

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்

குமரி மாவட்டம் மலங்கரை திருச்சபை பாதிரியார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்

கொல்லங்கோடு சூழாலைச் சேர்ந்த பெனடிக் ஆன்றோ, பிலாங்காலை விண்ணோற்பு ஆலைய பங்குத் தந்தையாக இருந்து வருகிறார். இவர் ஆலயத்துக்கு வரும் பெண்களிடம் நெருக்கமாக பழகி பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

we-r-hiring

தேவாலயத்துக்கு வரும் பெண்களின் போன் நம்பர் வாங்கி வாட்ஸ் அப் மூலம் பேசியுள்ளார். மேலும் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி பெண்களை வீடியோ காலில் நிர்வாணமாக நிற்க சொல்லி அதனை ஸ்கீர்ன் ஷாட் மூலம் சேவ் செய்து வைத்து அவர்களை மிரட்டி பணம் வசூலித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களும் வேறு வழியின்றி பணத்தை பாதிரியாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பெனடிக் ஆன்றோ மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், பெனடிக் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நியாயம் கேட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் சிலரை கொல்லங்கோட்டுக்கு அழைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ