spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா!

இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா!

-

- Advertisement -

நடிகை ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய திரை உலகில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் கடந்த 2019ல் கிஸ் என்ற கன்னட படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரீலீலா.இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா! அதன்படி மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அதுமட்டுமில்லாமல் குர்ச்சி மடத்தப்பட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இந்திய அளவில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலும் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார் ஶ்ரீலீலா. அடுத்தது தமிழில் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 22 வயதுடைய இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை ஸ்ரீலீலா கடந்த 2022 ஆம் ஆண்டு பை டு லவ் என்ற கன்னட படத்தில் நடித்த போது அந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா! அதைத்தொடர்ந்து அவர் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதே ஆண்டில் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். மேலும் இவர் பல நலத்திட்டங்களையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ