spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் - மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது

அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் – மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது

-

- Advertisement -

நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் பேச வேண்டாம் என ஆதவ அர்ஜுனாவிற்கு கட்சியின் பொறுப்பாளர் என்ற முறையில் அறிவுறுத்தல் வழங்கினேன். கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதவ அர்ஜுன் கருத்து தெரிவித்ததால் கட்சியிலிருந்து 6 மாதம் இடை நீக்கம் செய்து உள்ளோம்.

அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் - மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது

we-r-hiring

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் இருந்தது தலைமையை மீறி அவர் செயல்படுவது போன்ற பேச்சுக்கள் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பெஞ்சள் புயல் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

விசிகவின் பொது செயலாளர் ஆதவ அர்ஜுனா அண்மைகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அல்லது சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டதின் மூலம் கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது.அதுகுறித்து அவரிடம் பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்.ஆனாலும் கூட அவரின் அண்மை பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கும்,தலைமையின் நம்பக தன்மைக்கும் எதிராக அமைந்த சூழலில் தான் கட்சியின் முன்னணி தலைவர்கள்,தலைமை நிர்வாகத்தை சார்ந்தவர்களோடு கலந்து பேசி 6 மாத காலம் அவரை இடைநீக்கம் செய்து இருக்கிறோம்.

ஆதவ் அர்ஜுனாவின்

 

6 மாத கால இடைநீக்கம் செய்தது தொடர்பாக ஆதவ அர்ஜுனா  விளக்கம் கொடுக்க space உள்ளது. அவர் விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலமுறை ஆதவ அர்ஜுனாவிற்கு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். அதை மீறியதால் அவசரத் தேவையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். ஆதவ அர்ஜுனாவின் பேச்சு திமுக விசிக கூட்டணியில் ஏதேனும் விரிசலை ஏற்படுத்தியதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

திமுக தரப்பில் எந்த அழுத்தமும், நெருக்கடியும் எனக்கு இல்லை. அதைப்பற்றி யாரும் எதுவும் பேசவில்லை விஜய் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க முடியாது என்று எடுத்த முடிவு சுதந்திரமான முடிவு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த மோதலும் இல்லை. விஜய் அவர்களோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆனால் அவரோடு நாங்கள் ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க்கிறபோது எங்களுடைய கொள்கை பகைவர்கள், எமது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று கருதக்கூடியவர்கள், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு பிரிவினைவாதம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் உணர்ந்து எங்கள் நலனை கருத்தில் கொண்டு, நாங்கள் எடுத்த முடிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது.

நிகழ்ச்சியில் பங்கேற்காதது  எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.  எனவே அவரை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என்பதை முன்கூட்டியே நாங்கள் அறிவித்து விட்டோம். ஆனால் அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுபொருளாக சிலர் திட்டமிட்டு மாற்றினார்கள். நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ அர்ஜுன் அவர்களும் கூட அந்த விழாவிலே பங்கேற்பதற்கு முன்பு என்னிடத்தில் பேசினார் .அந்த நூலை உருவாக்கியதில் உங்களுக்கு பங்கு இருக்கிறது ஆகவே நீங்கள் அந்த விழாவை தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.

அப்படி உங்களை கட்டுப்படுத்துவது ஜனநாயகம் இல்லை ஆகவே நீங்கள் சுதந்திரமாக அந்த நிகழ்வில் பங்கேற்கலாம் எனக்கு எந்த நெருடலும் இல்லை என்பதை அவருக்கும் நான் சொன்னேன். ஆனால் அதே வேளையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம் புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி பேசுங்கள் அல்லது அந்த நூல் உருவாக்கத்தின் பின்னணி பற்றி பேசுங்கள் என்று நான் அவரிடத்திலே ஒரு கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர் என்கின்ற முறையில் சில வழிகாட்டுதல்களை தந்தேன்.

அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது நம்பிக்கையை  நொறுக்கும் அளவிற்கு இருந்தது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்ததன் அடிப்படையில்  கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்று கருத்து கொண்ட தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து பேசும் ஆரோக்கியமான சூழல் தமிழகத்தில் இல்லை. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் இருந்தது தலைமையை மீறி அவர் செயல்படுவது போன்ற பேச்சுக்கள் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கம்! – தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

MUST READ