கடற்கரை கிராமங்களில் சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதலே தனது தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்று காலை கூட்டப்பனை, நவ்வலடி, கூடுதாழை மற்றும் உவரி உள்ளிட்ட முக்கிய கடற்கரை கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார். சபாநாயகர் வருகையை ஒட்டி, மீனவ கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய அப்பாவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்திய சாதனையாக கூட்டு குடிநீர் திட்டம் கிராமப்புறங்களுக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை திட்டம். பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி போன்ற அரசின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறினார்

மத்திய அரசு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தமிழக மக்களை வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டிய, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை “மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்கி வருகிறது. ஆனால், அடுத்து அமையப் போகும் திமுக ஆட்சியில், மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், சோனியா காந்தி மற்றும் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த அதே பழைய பாணியில், முழுமையான வேலை வாய்ப்புத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்களை மாற்ற உத்தரவிட முடியாது – நீதிமன்றம் விளக்கம்
