Homeசெய்திகள்அரசியல்விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் - திமுக வேட்பாளர் கருணாஸ்...

விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் – திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டி

-

- Advertisement -

விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன்  நான்தான் என சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் வேட்பாளராக போட்டியிரும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன்  நான்தான் -  திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டிசிவகங்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விருப்பமுள்ள தொகுதியில் கடைசி தொகுதியாக சிவகங்கை தொகுதியை தான் கேட்டதாகவும் , முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை தொகுதியை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறினார்.

படப்பிடிப்பு இல்லாத காலங்களில்  சிவகங்கையில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்ததாக கூறினார் . தொகுதி மக்களுக்கு பரிச்சயமானவர் என்பதால் வெற்றி பெறுவேன் என்று கூறினர்  சிவகங்கையை காரைக்குடியோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிவகங்கை மிகவும் பின்தங்கி உள்ளது. சிவகங்கை தொகுதியை காரைக்குடியின் வளர்ச்சியை விட உயர்த்துவேன் என்றார். சொல்லுக்கு முன் செயல். செயலில் செய்து காட்டுவோன் என்றவர் கூட்டணிக் கட்சியின் தலைவராக இருப்பதால் முதல்வரை எளிதில் சந்தித்து தொகுதிக்கு தேவையானதை கேட்டு பெறுவேன்  என்றார்.

we-r-hiring

கருணாஸ் மீது ஜாதி ரீதியான உள்ள குற்றச்சாட்டு தேர்தலில் பாதிக்குமா என்ற கேள்விக்கு  எனது அடையாளம் முக்குலத்தோர் புலிப்படை. ஆனால் சமுதாய ரீதியான அமைப்பு வைத்திருந்தாலும் எந்த ஒரு சமூகத்துக்கும் வெறுப்பு அரசியல் 18 ஆண்டுகளாக செய்ததில்லை என்று கூறினார். மனித அன்பை மனித நேயத்தை நேசிக்கக் கூடியவன். எதார்த்தமும் உண்மையும் என்றும் வெல்லும் என்றார்.

நடிகைகளை அரசியலில் கொச்சைப்படுத்துவது குறித்து கூறுகையில் அது அநாகரிகமான செயல் என்றார். என்னை கூட கூவத்தூரில் கூல் காச்சியதாக சொன்னார்கள் நரம்பற்ற நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசும் என்றார் . நடிகைகளை நடிகையாக பார்க்க வேண்டும் என்றார்.

விஜய் குறித்தான கேள்விக்கு நடிகர் விஜய் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார் காதல் படத்தில் சொன்னது போல சின்ன கேரக்டர், மாப்பிள்ளை கேரக்டர், நண்பன் கேரக்டர் அப்படி எல்லாம் இல்லாமல் ஸ்ட்ரைட்டா ஹீரோ தான் என முதல்வர் நாற்காலி கனவில் வருகிறார். மக்கள் எந்த அளவு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பது தெரியவரும். ஒரு பெரிய நட்சத்திரம் விஜய்க்கு அங்கீகாரம் இருக்கும். ஆனால் 30 ஆண்டுகால சினிமா வாழ்வில் மக்களுக்கு என்ன செய்தார் முக்கியமான பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுத்தாரா? என்று கேள்வி எழுப்பினர். தேர்தல் வந்த பிறகு  ஜோசப் விஜய் என கிறிஸ்தவராக அடையாளம் காட்டுவது ஏன்? அவரது தந்தை தாய் மதத்துக்கு திரும்பியதாக கூறுகிறார்.  அப்பா மகன் குழப்பம் பாஜகவின் மத அரசியலை விட மோசமான அரசியலாக உள்ளது என்றார் . விஜய்க்கு கூட்டம் கூடுவது குறித்த கேள்விக்கு பலாப்பழத்தை ரோட்டில் வச்சா ஈ மொய்க்க தான் செய்யும் அதே கண்ணாடி கூட்டிக்குள் வைத்தால்  ஈ வெளியில் தான் நிற்கும் ஒரு நடிகர் என்றால் வேடிக்கை பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்றார். கரகாட்டம் ஆடும் நடன பெண்மணியை பார்க்க கூட கூட்டம் அதிகம் வருகிறது என்றார்.

திமுகவினர் மீது வழக்கு இருப்பதாக விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, விஜய் மீது வருமான வரி கட்டவில்லை என்ற வழக்கு இருக்கிறது. திமுக மீது குறை சொல்லியே ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கிறார் இதெல்லாம் மட்டமான அரசியல் என்றார். கரூரில் சூட்டிங் எடுப்பதற்காக 40 மக்களை கொன்று விட்டுச் சென்றவர்கள்தானே இவர்கள் என்றார். ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக தொடரும். கடந்த ஐந்தாண்டு கால சிறப்பான திட்டங்கள், பெண்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கை, மக்கள் திருப்தி அடைந்துள்ளபோது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமென்று தெரிவித்தார்.

சந்திரசேகர் மகன் நடிகராக வரும் பொழுது கருணாசின் மகன் டைரக்டராக வரும்பொழுது ஏன் உதயநிதி வரக்கூடாதா? என்றார். தகுதி வாய்ந்த, நிர்வாக திறன் பொது அறிவு அரசியல் அனுபவம் பெற்றவர் வரலாம் என்றார்.

விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன்  நான்தான் என்றார். விஜய் தேர்தலில் இதுவரை போட்டி போடவில்லை. ஆனால் நான் 5 வருடம் எம்.எல்.ஏவாக மக்களுக்கு சேவை செய்துள்ளேன். விஜய் ஹீரோ தான். நான் காமெடியன் தான். ஆனால் காமெடியன் தான் நிஜ ஹீரோ  என்றார்.

“திமுகவின் சாதனைகளைச் சொன்னாலே வெற்றி உறுதி!” – சிவகங்கையில் கருணாஸ் அதிரடிப் பிரச்சாரம்

MUST READ