மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “மக்கள் மத்தியிலே எழுச்சி ஏற்பட்டிருக்கிறது திமுக அரசின் ஐந்து ஆண்டு கால பணிகளையும், திமுகவின் தேர்தல் அறிக்கையை சிறப்பாக இருப்பதாகவும் மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள். எனவே மீண்டும் திமுக ஆட்சி திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எந்தெந்த சந்தேகமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி அதிமுகவின் பிரச்சாரம் எடுபடவில்லை மூன்றாவது அணி நடிகர் விஜய் மற்றும் சீமானின் கட்சிகள் சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை செய்தாலும் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாசல்களில் ஜமாத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவாலயங்களிலும் முடிவெடுத்து இருக்கிறார்கள் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கான பிரச்சினை அதே போன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளை தொடர்ந்து வரவேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி இரண்டு தொகுதிகளிலும் பிரகாசமாக உள்ளது. எடப்பாடி திமுகவை பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லாத காரணத்தினால் இல்லாத பொல்லாத பொய்களை வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டார்களோ அதே போன்று பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி பொய் பிரச்சாரங்களை அருவருக்கத்தக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு இருக்கிறார் மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அபூபக்கர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளாா்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவரும், மாவட்ட பொருளாளருமான மீராசா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் பாய், எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட தலைவர் மைதீன் கனி, மாவட்ட செயலாளர் யூசுப், அபுபக்கர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஆகியோா் கலந்துக் கொண்டனா்.
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
