Homeசெய்திகள்தேர்தல் 2026வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

-

- Advertisement -

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு ஏற்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது தேர்தல் சத்தியப்பிரமாணத்தில் வருமானம், சொத்து மற்றும் நிறுவன தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

we-r-hiring

அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் எம். முரளி வினோத், 06.04.2026 அன்று வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (Returning Officer) முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பிரிவுகள் மேற்கோள் காட்டி குற்றச்சாட்டு
இந்த மனு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (RP Act) பிரிவு 33A மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 (Rule 4A) அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டி வருமானம் மறைத்ததாக குற்றச்சாட்டு
ஆதவ் அர்ஜுனா, தனது வங்கி வைப்புத் தொகைகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, HDFC மற்றும் Axis வங்கிகளில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான டெபாசிட் வைத்திருந்தும், அதனால் கிடைக்கும் வருமான விவரங்களை மறைத்துள்ளார்.

சுமார் ரூ.84 லட்சம் வரை வட்டி வருமானம் கிடைத்திருந்தும், அதை “வருமானத்தின் மூலங்கள்” பகுதியில் குறிப்பிடாமல் “Business” என்று மட்டும் பதிவு செய்துள்ளார்.

மேலும், Axis வங்கி (Eldams Road, Chennai) சேமிப்பு கணக்கில் ரூ.1,95,17,171.13 இருப்பு இருந்ததாகவும், அதிலிருந்தும் வட்டி வருமானம் கிடைத்திருந்தும், அது குறிப்பிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தேதி விவரங்களில் மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு,
வங்கி கணக்குகள் தொடங்கிய தேதி மற்றும் ரூ.14 கோடி டெபாசிட் செய்யப்பட்ட தேதி போன்ற முக்கிய தகவல்களை திட்டமிட்டு மறைத்துள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் செயலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கையிருப்பு பணம் குறித்த சந்தேகம்
வேட்பாளர் தனது கையிலேயே ரூ.1,69,90,582/- பணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவியின் கையிலேயே ரூ.12,22,799/- பணம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அளவிலான பணம் கையிருப்பில் இருப்பது, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுப்புவதாகவும், வருமான வரி சட்ட விதிமுறைகளுக்கும் முரணானதாக இருக்கலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிறுவன தகவல்கள் மறைத்ததாக குற்றச்சாட்டு
மேலும், அவரது மனைவி தொடர்புடைய பல LLP மற்றும் Private Limited நிறுவனங்களில் பங்குதாரர்/ப்ரொமோட்டராக இருப்பதை சத்தியப்பிரமாணத்தில் வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதில் சில முக்கிய நிறுவனங்கள்:

  • Magnetic Realcon LLP
  • Best & Co Traders LLP
  • Oakwood Townships LLP
  • Ambitious Skyscrappers LLP
  • Eminent Dwellers LLP
  • Giant City Promoters LLP
  • Bloom Dwellers LLP
  • Groovy Infracom LLP

மேலும்,

  • Daisy Merchandisers Pvt Ltd
  • Martin Property Developers Pvt Ltd
  • Martin Township Developers Pvt Ltd
  • Dominant Housing Developers Pvt Ltd
  • Explicit Builders and Agency Pvt Ltd
  • Arise Investments and Capital Pvt Ltd
  • Win-Finity Gaming Pvt Ltd உள்ளிட்ட பல நிறுவனங்களும் இதில் அடங்கும்.

மூன்று சத்தியப்பிரமாணங்களிலும் தகவல் மறைவு,
30.03.2026, 04.04.2026 மற்றும் 06.04.2026 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சத்தியப்பிரமாணங்களிலும் இத்தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு நிராகரிக்க கோரிக்கை
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு தற்போது அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…

MUST READ