Homeசெய்திகள்அரசியல்தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி - பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

-

- Advertisement -

தர்மபுரியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி - பிரேமலதா விஜயகாந்த்தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டாா் அப்போது அவா் பேசியதாவது, “பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என்று கேப்டன் எப்போதுமே சொல்வார். பெண்கள் அதிகமாக வாழும் இந்த தர்மபுரியில், பெண்களுக்கான பல திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி எல்லா பெண்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

நீங்க குளிப்பாட்டி சீருடை மட்டும் போட்டு பள்ளிக்கு அனுப்புங்க. பள்ளியில் அவங்க காலை உணவு- மதிய உணவு சாப்பிடுவார்கள். இரவு உணவுக்கு மட்டும் வீட்டில் சமைத்து கொடுத்தால் போதும். திமுக 2.0 ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது. ரூ.5லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் தொழிலை சிறப்பாக செயல்படுத்த முடியும். வாழ்க்கையை முன்னேற்றலாம். சொந்த காலில் நின்று சம்பாதிக்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.1500 எல்லாருக்குமே தரப்படும். முதியவர்களுக்கு ரூ.2ஆயிரம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2500 வழங்கப்படும்.

we-r-hiring

பால் கொள்முதல் விலை ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். நெல்லுக்கும், கரும்புக்கும் அதிக விலை தரப்போகிறோம். வாக்கு கொடுத்தது கொடுத்தது தான். மு.க.ஸ்டாலின் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பது உறுதி. திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…

MUST READ