தேமுதிக மாநாட்டில் தேமுதிகவினர் “நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, முதல்வர் பதவி வேண்டும், 5 சீட்டு 10 சீட்டு தேவை இல்லை, நாங்க எல்லாம் ஆண்டப் பரம்பரை” மேடையிலேயே எல்லோரும் பேசினார்கள். முன்பு பெரிய கட்சி தான். ஆனால் இன்றைய எதார்த்தத்தை பிரேமலதா விஜயகாந்த் உணரவில்லை.
2021 தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு 0.43% வாங்கினார்கள். அப்போது விஜயகாந்த் உயிரோடு இருந்தார். பின்பு 2024-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

அப்போது அதிமுகவினர் ஓட்டை வாங்கி 2.59% வாக்குவங்கியைத் தேமுதிக காட்டியது. மற்றபடி இவர்களுக்கு வாக்குவங்கி எல்லாம் இன்றைக்கு பெரிதாக இல்லை.
வாழ்ந்துகெட்ட ஜமீன்தார் என்ற முறையில் அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் அவர்களை யாரும் கெடுக்கவில்லை. 2016-ல் கலைஞர் கருணாநிதி அழைத்தபோதும் கூட்டணிக்கு செல்லாமல் அவர்களே தான் அவர்களை அழித்துக்கொண்டனர்.
இப்போது திமுக, அதிமுக என எல்லோரையும் “நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது” என்று பேசி மிரட்டுவதாக நினைத்துக்கொண்டு அவர்களே அவர்களை நகைப்பிற்கு உள்ளாக்குகிறார்கள்.
இன்றைய நிலையில் அவர்களுக்கு 6 சீட்டே அதிகம். எல்லோரும் கழட்டிவிட்டால் இன்றைக்கு அவர்கள் 0.2% கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம். இந்து எதார்த்தைக் கூட புரிந்துக்கொள்ள தெரியாத தலைவர்தான் பிரேமலதா விஜயகாந்த்.
டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…


