spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்த சிறுவனை நினைத்து நான் கவலையுடன் இருக்கிறேன்..... அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

அந்த சிறுவனை நினைத்து நான் கவலையுடன் இருக்கிறேன்….. அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க வந்தார். அந்த சிறுவனை நினைத்து நான் கவலையுடன் இருக்கிறேன்..... அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!அப்போது அல்லு அர்ஜுனை பார்க்க கூட்டம் கூட்டமாக திரண்டு வந்த ரசிகர்களினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் அந்த உயிரிழந்த பெண்ணின் 9 வயதுடைய மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தினால் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கைதான சில மணி நேரங்களில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனை திரைப்படங்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஸ்ரீ தேஜ் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ் குறித்து நான் கவலையாக இருக்கிறேன். தற்போது நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்த நேரத்தில் சந்திக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். மேலும் அவர்களுக்கு மருத்துவ மற்றும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பை நான் ஏற்க உறுதியாக இருக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும். அவருடைய குடும்பத்தினரை விரைவில் சந்திக்க நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ