- Advertisement -
டாஸ்மாக் வருமானம் ரூ.45,000 கோடி – நிதியமைச்சர்
கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023- 2024 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.7,26,028.83 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. 2021ல் வெறும் ரூ33,746 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாயை, இந்த நிதியாண்டில் ரூ50,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

2023- 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.