spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேசிய விருதை திரும்ப பெற வேண்டும்.....அல்லு அர்ஜுனுக்கு எதிராக கிளம்பும் அடுத்தடுத்த சிக்கல்கள்!

தேசிய விருதை திரும்ப பெற வேண்டும்…..அல்லு அர்ஜுனுக்கு எதிராக கிளம்பும் அடுத்தடுத்த சிக்கல்கள்!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அதே சமயம் இவர் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
தேசிய விருதை திரும்ப பெற வேண்டும்.....அல்லு அர்ஜுனுக்கு எதிராக கிளம்பும் அடுத்தடுத்த சிக்கல்கள்!

இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதே சமயம் ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் சில மணி நேரங்களில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன் தனது நற்பெயரை கெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு அல்லு அர்ஜுன் பேசியிருந்த நிலையில் தெலுங்கானா போலீஸ் அல்லு அர்ஜுனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தது புஷ்ப பாகம் 1 திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.தேசிய விருதை திரும்ப பெற வேண்டும்.....அல்லு அர்ஜுனுக்கு எதிராக கிளம்பும் அடுத்தடுத்த சிக்கல்கள்! ஆனால் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இந்த தேசிய விருதை திரும்ப பெற வேண்டும் என தெலுங்கானா MLC தேன்மார் மல்லண்ணா கூறியுள்ளார். அதாவது புஷ்பா படமான்து சந்தன மரக்கட்டை கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் காரணத்தால் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு அல்லு அர்ஜுனுக்கு எதிராக தொடர்ந்து சிக்கல்கள் கிளம்பி வருகிறது. இந்த தகவல் அல்லு அர்ஜுன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

MUST READ