spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர்.... எம்.ஜி.ஆர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர்…. எம்.ஜி.ஆர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர்.... எம்.ஜி.ஆர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!திரைத்துறையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நாடோடி மன்னனாக மக்கள் மனதில் நின்றவர் எம்.ஜி.ஆர். இவர் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை விட இவர் மக்களை நேசித்து மக்களுக்காக ஆற்றிய பங்களிப்பு அதிகம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவில் தான் சம்பாதிக்க சொத்துக்களை விட கோடான கோடி மக்களை சொத்தாக சேகரித்து வைத்திருந்தவர் எம்ஜிஆர். அதே சமயம் ஏழைகளின் நெஞ்சங்களில் அன்றும் இன்றும் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்நிலையில் (டிசம்பர் 24) எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்றும் அவருடைய உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் எம்.ஜி.ஆர் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நான் குழந்தையாக தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர். நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர். மக்கள் மனம் கவருவதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர். அன்புக்கும் மரியாதைக்கும் உரிய உறவாக நிலைத்து விட்ட எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் இன்று. என்னாளும் மறையாத நினைவுகளை தந்தவரை இன்னாளில் வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ