spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

-

- Advertisement -

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

இந்த உலகில் வாழ்ந்தவர்கள் பல கோடி, மறைந்தவர்களும் பல கோடி. ஆனால் மக்கள் மனதில் நிறைந்தவர்கள் நின்றவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர்தான் மனிதநேயமிக்க தலைவன், நிகரில்லா தலைவன், அள்ளிக் கொடுக்கும் வள்ளல், மக்கள் திலகம், மனிதக் கடவுள், பொன்மனச் செம்மல் என்று பல பெயர்களால் புகழப்படும் எம்.ஜி. ராமச்சந்திரன். இத்தகைய பெருமைகளை உடைய எம்.ஜி.ஆர் ஐ பற்றி கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் அவருடைய நினைவு நாளான இன்று (டிசம்பர் 24) அவரை எண்ணி பெருமை கொள்வோம்.அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

we-r-hiring

ஆரம்பத்தில் சிறு சிறு மேடை நாடகங்களில் நடித்து பின்னர் சினிமா கனவுடன் மெட்ராஸ் வந்து தனது கடின முயற்சியால் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். அந்த வகையில் இவர், வீர ஜெகதீஷ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடக்கத்தில் இவருடைய சில படங்கள் பெரிதளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் ‘குலேபகாவலி’ திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!அதைத்தொடர்ந்து இவருக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல திரும்பிய பக்கம் எல்லாம் இவரைப் பற்றிய பேச்சுதான். இவரைக் கண்டு திரைத்துறைக்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள். அதில் ஒருவர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். அதேசமயம் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் உருவெடுத்து அதிலும் வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர். இதற்கிடையில் இவர், நாட்டு மக்களுக்காக தன்னுடைய சொத்துக்களை வாரி வழங்கிய வள்ளலாக வலம் வந்தார். சினிமாவில் நடிப்பவர்களும் முதலமைச்சராகி பொதுமக்களுக்காக உழைக்கலாம் என்பதற்கு ஆரம்ப புள்ளியாக விளங்கியவர்தான் எம்.ஜி.ஆர். அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!அப்படி 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடி பத்து ஆண்டுகள் முதல்வராக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். மேலும் முதல்வராகவே தன்னுடைய கடைசி மூச்சுவரையிலும் வாழ்ந்தார். தன்னுடைய ஆட்சி காலத்தில் நேர்மையாக சொன்னதை செய்து காட்டிய மனிதக் கடவுளாக திகழ்ந்தார். பிறகு 1980 ஆம் ஆண்டின் பாதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், 1987, டிசம்பர் 24 இல் தன்னுடைய 70ஆவது வயதில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். இவருடைய மறைவு தமிழக மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!இவருடைய இறுதி ஊர்வலத்தில் கோடான கோடி மக்கள் இவரை நினைத்து கதறி அழும்போது மக்கள் மீது இவர் கொண்டிருந்த அன்புக்கும் இவர் மீது மக்கள் கொண்ட அன்புக்கும் என்றுமே மரணம் இல்லை என்று தெரிந்தது. இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் வாழும் வரையிலும் நம் மனதில் என்றுமே வாழும் வரம் பெற்ற வள்ளலாக வாழ்ந்து வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

MUST READ