தலைநகர் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம்.
உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது ஜி 20 மாநாடு 2023 ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பொறுப்பு கடந்த டிசம்பர் 1ம் தேதி முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் தயார் செய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை,திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடத்த திட்டமிட பட்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் நடைபெறும் மாநாட்டின் துணை மாநாட்டில் ஜி20 மாநாட்டின் போது ஆலோசிக்கப்படும் சாராம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதற்காக மாநில அரசின் ஒத்துழைப்பை கோரும் வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லி சென்றடைந்துள்ளனர்.


டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு வரவேற்பு அளித்தார். அதேபோல் தமிழக அரசு இல்லத்திலும் தமிழக காவல்துறையின் திகார் பட்டாலியன் பிரிவு காவல்துறை மரியாதை வழங்கினர்.