spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டை கிரையம் பேசித் தருவதாக ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் கைது!

வீட்டை கிரையம் பேசித் தருவதாக ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் கைது!

-

- Advertisement -

தேனியில் வீட்டை கிரையம் பேசித் தருவதாக ஒப்பந்தம் செய்து, ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் விஜயகுமாரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

வீட்டை கிரையம் பேசித் தருவதாக ரூ.63.66 லட்சம் ஏமாற்றிய கொத்தனார் கைது!தேனி அரண்மனைப்புதுார் பசுமை நகர் பாஸ்கரன் மனைவி சுகந்தி 32. இவரின் தந்தை பாஸ்கரனும், லட்சுமிபுரத்தை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் விஜயக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததனர். இந்நிலையில் 2024 ஜூன் 27ல் சுகந்தியின் தந்தை பாஸ்கரன் இறந்துவிட்டார்.

we-r-hiring

இந்நிலையில் சுகந்தியின் வீட்டிற்கு வந்த விஜயக்குமார் அவரது மனைவி கோகிலா அவர்களது மகள் காவியாவிற்கு திருமணம் நடக்க உள்ளதாகவும். கோகிலா பெயரில் உள்ள 1809 சதுரடி உள்ள வீட்டை கிரையம் தருவதாக கூறி ரூ.63.67 லட்சத்திற்கு பேசி முடித்து, ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.

அன்றைய தினமே சுகந்தியிடம் ரூ.33 லட்சத்து 66 ஆயிரத்து 200 ரூபாயை மூவரும் ரொக்கமாக பெற்றனர் அதன்பின் அந்த வீட்டின் மீது, மூவரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.20 லட்சத்தை, ஒப்பந்தத்தில் உள்ளபடி சுகந்தி செலுத்தினார்.

அதன் பின்னர் பாக்கி ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆக மொத்தம் ரூ.63 லட்சத்து 66 ஆயிரத்து 200 பெற்று, வீட்டை கிரையம் எழுதித்தருவதாக நம்பிக்கை தெரிவித்தனர். பின் அந்த விட்டை விஜயகுமார், அவரது மனைவி கோகிலா ஆகியோர் இணைந்து தனது மகள் காவியாவிற்கு தானசெட்டில்மெண்ட் எழுதி கொடுத்து சுகந்திக்கு மோசடி செய்தனர்.

இதுகுறித்து சுகந்தி விஜயகுமார் கோகிலாவிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சுகந்தி தேனி எஸ்.பி சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி, உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூவர் மீது மோசடி வழக்கு பதிந்து விஜயகுமாரை நேற்று கைது செய்தனர்.

MUST READ