ஆளுநர் மனைவிகளை வைத்து சூது ஆடுங்கள் என்றார்- திண்டுக்கல் ஐ.லியோனி
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு கொடுத்திருந்த சட்ட மசோதாவுக்கு அனுமதி தராமல் அது சூதாட்டம் இல்லை என்றும் மகாபாரத்தில் தர்மர் சூதாட்டம் விளையாடி இருப்பதாகவும் அதனால் சூதாட்டம் என்பது இந்தியா பண்பாடு என்று கூறிவருவதாக திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம் என்பது அவர்களின் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவக்கூடிய திட்டம். தமிழகத்தில் அனைத்து பெண்களையும் பாதுகாக்கின்ற ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலே பிக்பாக்கெட் அடிச்சு 62 ஆயிரம் கோடி கடனில் வைத்துவிட்டு சென்றவர்கள் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள். அத்தகைய கடனை 32 ஆயிரம் கோடியாக குறைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிதி மேலாண்மை தலைவராக முதல்வர் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மூலம் 27 சதவீதம் பெண்கள் உயர்கல்வி சேர்ந்து இருக்கின்றனர். பெண்களை உயர்கல்வியில் படிக்க வைத்து அவர்கள் வாழ்வின் உச்சத்தை எட்ட முதல்வர் பெண்களுக்கு உதவி செய்து வருகிறது.தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் ரம்மி ரவியாக செயல்பட்டு வருகிறார். சூதாட்டம் என்பது இந்தியா பண்பாடு. மகாபாரத்தில் மனைவியை அடகு வைத்து தர்மன் சூதாட்டம் விளையாடியதால் நம்மையும் கையில் பணம் இல்லை என்றால் தமது மனைவிகளை வைத்து சூது ஆடுங்கள் என ஆளுநர் கூறுகிறார்” என்றார்.