spot_imgspot_img
Homeசெய்திகள்போதையில் ரகளை - கடலூர் காவலர் கைது

போதையில் ரகளை – கடலூர் காவலர் கைது

-

- Advertisement -

போதையில் ரகளை – 3 பிரிவின் கீழ் கடலூர் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது

கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். கடலூரில் காவலராக பணியாற்றும் இவர், புதுச்சேரிக்கு வந்து மது குடித்தார். இதில் போதை தலைக்கு ஏறி கன்னியகோவில் பகுதியில் ரகளையில் ஈடுபட்டார்.

போதையில் ரகளை - கடலூர் காவலர் கைது

we-r-hiring

அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் ஜனார்த்தனனை, கிருமாம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ஜனார்த்தனன், போலீசாரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டார்.

போதையில் ரகளை - கடலூர் காவலர் கைது

இதையடுத்து அவரை போலீசார் குளிப்பாட்டி, போதையை தெளிய வைத்தார். இந்த சம்பவம் குறித்து ஏட்டு ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஜனார்த்தனன் மீது 3 பிரிவின் கீழ் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

MUST READ