spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு - பாஜகவினர் கைது

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு – பாஜகவினர் கைது

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பாஜகவின் பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத்தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது.

திருவண்ணாமலை அடுத்த தென் முடியனூர் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ராஜா.

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு - பாஜகவினர் கைது

we-r-hiring

இவர்கள் இருவரும் நேற்று தென் முடியனுர் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அவ்வழியாக வைக்கோல் ஏற்றி வந்த டாட்டா ஏஸ் டிரைவரை மிரட்டி, குடிபோதையில் தகராறு செய்வதாக தண்டராம்பட்டு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது அங்கிருந்து இருவரும் தப்பித்துச் சென்று வயல்வெளியில் பதுங்கினர்.

இதன் அடிப்படையில் தண்டராம்பட்டு போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு - பாஜகவினர் கைது

இந்த நிலையில் தென்முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த பாஜக பட்டியல் இன அணி மாவட்ட துணை தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 10 பேர் நேற்று தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து இருவரையும் விடுவிக்கும்படி தகராறு செய்து அங்கிருந்து சென்றனர்.

இதன் அடிப்படையில் தண்டராம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பச்சையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக மாவட்ட பட்டியல் இன அணி துணைத் தலைவர் குபேந்திரன், முத்துவேல், தங்கராஜ், ஏழுமலை ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு - பாஜகவினர் கைது

அவர்கள் மீது 147, 448, 353, 294-B, 506(2) என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ