spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது என் உண்மையான பெயர் இல்லை..... மனம் திறந்த மகிழ் திருமேனி!

இது என் உண்மையான பெயர் இல்லை….. மனம் திறந்த மகிழ் திருமேனி!

-

- Advertisement -

இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். ஆரம்பத்தில் இவர் திரைத்துறையில் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இது என் உண்மையான பெயர் இல்லை..... மனம் திறந்த மகிழ் திருமேனி!அதன்பின் இவர் முன் தினம் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தடையறத் தாக்க, தடம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது என் உண்மையான பெயர் இல்லை..... மனம் திறந்த மகிழ் திருமேனி!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய மகிழ் திருமேனி விடாமுயற்சி படம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அத்துடன் மகிழ் திருமேனி என்பது தன்னுடைய உண்மையான பெயர் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். அதாவது மகிழ் திருமேனியிடம், உங்களுக்கு இந்த பெயரை வைத்தது யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிழ் திருமேனி, “இது என்னுடைய உண்மையான பெயர் இல்லை. இது என் புனைப்பெயர். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசையினால் இந்த பெயரை தேர்ந்தெடுத்தேன். தமிழ் மீது எனக்கு இருந்த பற்று காரணமாக இந்த பெயரை வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ