விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா, அஜித்துக்கு வெளியாக நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்தப் படம் அஜித்தின் 62 வது படமாகும். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் ஏற்படும் நாளை (பிப்ரவரி 6) திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விடாமுயற்சி திரைப்படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி வருகின்றன. அதே சமயம் இயக்குனர் மகிழ் திருமேனியும், இது தன்னுடைய மூலக்கதை இல்லை என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதன்படி வில்லன் கும்பலால் கடத்தப்பட்ட தனது மனைவி திரிஷாவை, அஜித் விடாமுயற்சியுடன் தேடி கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.
எனவே பிரேக் டவுன் படத்தை தான் அஜித்துக்கு ஏற்றவாறு பட்டி டிங்கரிங் செய்து உருவாக்கியுள்ளனர் என்று சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் – இல் திரிஷா தான் நெகட்டிவ் ரோலில் தோன்றுவார் என்றும் தனது கணவரை பழிவாங்குவதற்காக தான் கடத்தப்பட்டதாக நாடகமாடுவார் என்பது போன்று விடாமுயற்சி படத்தின் கதை இணையத்தில் லீக்காகி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது.