Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... எப்போது தெரியுமா?

பிரம்மாண்டமாக நடைபெறும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை….. எப்போது தெரியுமா?

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பிரம்மாண்டமாக நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... எப்போது தெரியுமா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடிக்க வருகிறார். அதே சமயம் இவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... எப்போது தெரியுமா?எனவே இதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சுந்தர். சி இயக்க வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தின் இதனை எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை வருகின்ற மார்ச் 6ஆம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த படமானது கிட்டத்தட்ட ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... எப்போது தெரியுமா?அதேசமயம் இந்த படத்தின் பூஜையையும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி 15 அடி உயர சிலை அமைத்து, பக்தி பாடகர்களையும் வரவழைத்து, அன்னதானம் ஏற்பாடு செய்து இப்பூஜையை ஒரு விழாவாகவே நடத்த இருக்கிறார்களாம். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படம் தொடர்பான ப்ரோமோ படப்பிடிப்பும் நடத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ