மமிதா பைஜு, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை மமிதா பைஜு மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு என்ற படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர் தற்போது தமிழிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மமிதா பைஜு, தற்போது விஜயின் ஜனநாயகன், விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் இவர், புதிய படம் ஒன்றில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் தற்போது தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் குபேரா, இட்லி கடை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். அடுத்தது இவர், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெயினர் படமாக உருவாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.


