மமிதா பைஜு தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் தனது திரைப்படத்தை தொடங்கியவர் மமிதா பைஜு. அந்த வகையில் இவர் பிரேமலு என்ற படத்தின் மூலம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் இவர், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர், ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜு, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அடுத்தது விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இரண்டு வானம் திரைப்படத்திலும் நடிக்கிறார் மமிதா பைஜு. மேலும் இவர், போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் ஹீரோயின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் மமிதா பைஜு. அதன்படி வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மமிதா பைஜு, சூர்யாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இருவருமே அப்படத்தில் இருந்து விலகி விட்டனர். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்தில் இணையாத இந்த கூட்டணி சூர்யா 46 படத்தில் இணையப்போகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.