அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியிலான புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ, ஜவான் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்ததாக சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். அந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க போவதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுக்க அட்லீ திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான முன்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்திருப்பதாகவும் படப்பிடிப்பை மும்பை மற்றும் வெளிநாட்டில் படமாக படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி தெரியவந்திருக்கிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில், அதாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கிறார் என்பது தொடர்பான பேச்சு அடிபடுகிறது. அடுத்தது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்கள்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.