spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித்..... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித்….. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் அஜித் குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார்.குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித்..... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. இது தவிர நடிகர் அஜித் ஆதிக், தனுஷ், வெங்கி அட்லூரி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் சிறுவயதிலிருந்தே பைக், கார் ஓட்டுவதில் ஆர்வமுடைய அஜித், அடுத்தடுத்த கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அதேசமயம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அஜித்துக்கு மத்திய அரசு, பத்ம பூஷன் விருதை அறிவித்தது.  இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா இன்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெறுகிறது.

we-r-hiring

இன்று மாலை பத்மபூஷன் விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விழாவில் கலந்துகொண்டு பத்ம பூஷன் விருதை பெற நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். ஏற்கனவே அஜித் தனது மனைவி, மகள், மகனுடன் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இன்று மாலை அஜித் விருதினை பெரும் அந்த நேரத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ