நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக பேபி ஜான் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
மேலும் இவர் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாகவும், மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் திருமணத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகி விடுவார் எனவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து வெளிவரவில்லை.
View this post on Instagram
இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது குட்டி குழந்தையுடன் கீர்த்தி சுரேஷ் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.