Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' கதை சொன்னதும் அஜித் இதை தான் சொன்னாரு.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!

‘குட் பேட் அக்லி’ கதை சொன்னதும் அஜித் இதை தான் சொன்னாரு…. ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத்தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.'குட் பேட் அக்லி' கதை சொன்னதும் அஜித் இதை தான் சொன்னாரு.... ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி! அதைத்தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி இவர் அஜித்தின் 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கினார். கேங்ஸ்டர் சம்பந்தமான கதைகளத்தில் அப்பா- மகன் உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. எனவே படத்தில் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும் நிலையில் இப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடிகர் அஜித் இந்த படத்தில் தீனா, பில்லா, வேதாளம் என பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அடுத்தது இந்த படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, வத்திக்குச்சி பத்திக்காதுடா போன்ற பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் சர்ப்ரைஸ் கேமியோக்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆதிக்க ரவிச்சந்திரசனிடம், “இந்த படத்தின் கதையை சொன்னதும் அஜித் சார் என்ன சொன்னார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதிக், “நல்லா இருக்கு. உடனடியாக இந்த படத்தை பண்ணுவோம்” என்றார். “மேலும் அன்று இரவே இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி பேசினோம். அதை தொடர்ந்து இரண்டு மாதங்களிலேயே படப்பிடிப்புக்கு சென்று விட்டோம். எல்லாமே வேகமாக நடந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ